மியான்மரில் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு: மேலும் 4 பேர் பலி


மியான்மரில் போராட்டத்தை ஒடுக்க ராணுவம்  துப்பாக்கிச்சூடு: மேலும் 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 April 2021 8:19 AM GMT (Updated: 4 April 2021 8:19 AM GMT)

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில், மோனிவா நகரப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு  ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 557- ஆக அதிகரித்துள்ளது. 

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை கண்டுகொள்ளாத ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.


Next Story