உலக செய்திகள்

13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம் + "||" + Release Of Fukushima Water Extremely Irresponsible - China

13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம்

13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம்
புகுஷிமாவில் அணு உலையில் இருந்து 13 லட்சம் லிட்டர் கழிவுநீரை கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
பீஜிங், 

ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி பேரலையின் தாக்குதல் காரணமாக, புகுஷிமா அணு உலையில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் காற்றில் கதிர்வீச்சு பரவி விடாமல் தடுக்க, லட்சக்கணக்கான டன் தண்ணீரை பயன்படுத்தி அணு உலையின் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைத்தனர்.

இதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது. அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணு உலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 13 லட்சம் டன் தண்ணீர் அந்த வளாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சேமித்து வைக்கப்பட்டுள்ள புகுஷிமா உலையின் அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. புகுஷிமா அணு உலையை மீண்டும் புதுப்பிக்க இந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியம் என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுகா தெரிவித்துள்ளார்.

சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என ஜப்பான் அரசு கூறினாலும், அதிலுள்ள ட்ரிட்டியத்தை முழுமையாக அகற்றுவதற்கான தொழில்நுட்பம் உலக நாடுகளிடம் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் திட்டமிட்டபடி இதனை செய்து முடிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு அண்டை நாடான சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் அரசின் இந்த முடிவு மிகவும் பொறுப்பற்ற தன்மை மற்றும் சர்வதேச பொதுமக்கள் உடல்நலம் மற்றும் அண்டை நாடுகளின் பாதுகாப்ப்பை இந்த  நடவடிக்கை கடுமையாக பாதிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்க சீனாவுக்கு உரிமை உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிப்பு
சீன ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
2. ‘எங்கள் ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது’; சீனா சொல்கிறது
சீனா கடந்த வாரம், லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் அடிப்படை பகுதியை எடுத்துச் சென்ற அந்த ராக்கெட், அப்பணி முடிந்தபின் சிதைவடைந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது.
3. இந்தியாவின் கொரோனா சூழ்நிலையை ஒப்பிட்டு சீனா ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது; அடுத்த வாரம் பூமியில் விழும்!
சீனா கடந்த வாரம் ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அந்த ராக்கெட் அடுத்த வாரம் பூமியில் விழலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
4. கொரோனா விவகாரம்: இந்தியாவுக்கு உதவ தயார்: சீன அதிபர் ஜி ஜிங்பிங்
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
5. தைவான் விவகாரத்தில் தலையீடு: நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.