உலக செய்திகள்

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா + "||" + Corona to 1,335 people in the last 24 hours in Oman

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா
ஓமன் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,364 ஆக உயர்ந்துள்ளது.
மஸ்கட்,

ஓமன் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,364 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் 785 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு 1,54,771 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.

அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்ததையடுத்து, ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,798 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 250 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் ‘கொரோனாவுக்கு சுயவைத்தியம் செய்துகொள்வது தவறான செயல்’; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் கொரோனாவுக்கு சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது தவறான செயலாகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. 3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
3. ஓமனில், ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா; 13 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
5. தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடலாம்; குடியிருப்பு வளாகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும் மாநகராட்சி அனுமதி
தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.