இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க ஆஸ்திரேலியா முடிவு


இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க ஆஸ்திரேலியா முடிவு
x
தினத்தந்தி 27 April 2021 4:01 AM GMT (Updated: 27 April 2021 5:31 AM GMT)

இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது இன்று ஆஸ்திரேலியா முடிவு செய்கிறது.

கான்பெர்ரா,
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடனான விமான சேவைகளைரத்து செய்வது தொடர்பாக முடிவெடுக்க  ஆலோசனை நடத்த உள்ளது. 

குயின்ஸ்லாந்து மாகாண அரசு, ஆஸ்திரேலியாவின் மைய அரசுக்கு இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.  

இந்த நிலையில், இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது தொடர்பாக முடிவெடுக்க ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இவ்விவகாரம் குறித்து ஆஸ்திரேலியாவின் பிரதமர் அலுவலகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

முன்னதாக கடந்த வாரம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகள் எண்ணிக்கைக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. 

Next Story