உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல் + "||" + Corona vaccination for 1 lakh 12 thousand people in the UAE in the last 24 hours; Ministry of Health Information

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதன்படி, அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் இதுவரை இந்த தடுப்பூசியானது 1 கோடியே 7 லட்சத்து 79 ஆயிரத்து 163 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 100-க்கு 108.99 பேர் என்ற அளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.