உலக செய்திகள்

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது + "||" + The total corona impact in Oman is approaching 2 lakh

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமன் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 902 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,123 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.6 சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 62 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 287 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்; டாக்டர் ராமதாஸ் அறிக்கை
ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2. மும்பையில் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது; பரிசோதனை செய்தவர்களில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
மும்பையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,000 பேர் பலி; நேற்று ஒரே நாளில் 22 பேர் சாவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியான நிலையில், இதுவரை 1,000 பேர் இறந்துள்ளனர்.
4. லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா
லடாக்கில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,333 ஆக உயர்ந்துள்ளது.
5. குஜராத் மாநிலத்தில் கொரோனா இறப்பில் உண்மையான எண்ணிக்கை மறைப்பா? - காங்கிரஸ் கட்சி விளக்கம் கோருகிறது
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைத்துக்காட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறி விளக்கம் கோருகிறது.