நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டிடம்; இஸ்ரேல் வான்படை அடுத்தடுத்து தாக்குதல்


நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டிடம்; இஸ்ரேல் வான்படை அடுத்தடுத்து தாக்குதல்
x
தினத்தந்தி 15 May 2021 8:29 AM GMT (Updated: 15 May 2021 8:29 AM GMT)

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல் காட்சிகள், செய்தி தொலைக்காட்சி நேரலையில் பதிவாகியுள்ளது.

காசா, 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. 

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. அங்கு செய்தி நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள் களத்தில் இருந்து செய்தியை கொடுத்து வருகின்றன. 

கடந்த புதன்கிழமை பிபிசி அரபு தொலைக்காட்சி நேரலையில், அந்நிறுவன செய்தியாளர் அட்டன் காசாவில் இருந்து  நிலவரத்தை விளக்கியுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் தெரியும் அல் ஷாருக் கட்டிடத்தின் முன்பாக ஏவுகணையொன்று விழுகிறது. அந்த சத்தம் கேட்டு அவர் திருப்பி பார்க்கும் போது, கட்டிடத்தை குறிவைத்து அடுத்தடுத்து குண்டுகள் வீசப்படுகிறது. 

இஸ்ரேலிய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் 13 மாடிகட்டிடம் சீட்டுக்கட்டை போன்று சரிந்து விழும் பதைபதைக்கும் காட்சிகள் தொலைக்காட்சி நேரலையில் வெளியாகியுள்ளது.


Next Story