உலக செய்திகள்

சினிமா டைரக்டரை பெற்றோரே கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம் + "||" + Iranian film director is murdered, chopped up and dumped in a suitcase 'by his parents in an honour killing over his unmarried status'

சினிமா டைரக்டரை பெற்றோரே கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்

சினிமா டைரக்டரை பெற்றோரே கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்
47 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளதால் சினிமா டைரக்டரை பெற்றோரே கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெஹ்ரன்,

ஈரான் தெஹ்ரான் நகரை சேர்ந்தவர் பாபக் ஹரோம்தின். 2009 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள பல்கலை கழகத்தில் சினிமா தொடர்பான பட்டப்படிப்பு முடித்து விட்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மேற்படிப்பு முடித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கி குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் டைரக்டராக பணியாற்றி வந்தார்.

47 வயதான பாபக் ஹரோம்தின் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். யாராவது ஒருபெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு ஈரானில் உள்ள அவரது பெற்றோர் தொடர்ந்து தொலைபேசி மூலம் பாபக் ஹரோம்தினை வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாபக் ஹரோம்தின் லண்டனில் இருந்து தனது சொந்த நாடான ஈரான் திரும்பியுள்ளார். பெற்றோருடன் வசித்து வந்த பாபக் ஹரோம்தின் சினிமா டைரக்‌ஷன் தொடர்பான பயிறுவிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். 

வீட்டில் இருந்த போதும் பாபக் ஹரோம்தின் பெற்றோர் அவரை யாரேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர் அதை மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், யாரேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் படி பாபக் இடம் அவரது தந்தை கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போது, தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாப்க் ஹரோம்தின் தந்தை சிறிது நேரம் கழித்து பாப்க் ஹரோம் சாப்பிட்ட உணவி மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனால், அவர் மயக்கமடைந்துள்ளார். 

ஆனாலும், ஆத்திரம் அடங்காத பாப்க் ஹரோம்தின் தந்தை தனது மகனை கத்தியால் குத்தி கவுரவக்கொலை செய்து அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார். 

இந்த கொடூர செயலுக்கு பாப்க் ஹரோம்தின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். துண்டுதுண்டாக வெட்டிய தனது மகனின் உடலை சூட்கேஸ் மற்றும் பைகளில் அடைத்து தெஹ்ரானின் அருகில் அமைந்துள்ள எக்படன் என்ற பகுதியில் வீசிச்சென்றுள்ளார்.

துர்நாற்றத்துடன் சூட்கேஸ் மற்றும் பையில் மனித உடல்பாகங்கள் கிடந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சூட்கேசில் இருந்தது பாப்க் ஹரோம்தினின் உடல் என்பதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து பாப்க் ஹரோம்தின் தந்தை மற்றும் தாயார் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது மகனை கொன்றதை பாப்க் ஹரோம்தினின் தந்தையும், அதற்கு உடந்தையாக இருந்ததை அவரது தாயாரும் ஒப்புக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 47 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததால் பெற்றோரே தனது மகனை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் புதிதாக 16,362 பேருக்கு கொரோனா பாதிப்பு!
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஈரானில் புதிதாக 17,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 344 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரானில் புதிதாக 15,975 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 391 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஈரானில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 355 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஈரானில் புதிதாக 19,731 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 452 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.