உலக செய்திகள்

புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி + "||" + Corona for 2,190 newcomers; 7 killed in one day in UAE

புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி

புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 744 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில், 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 613 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 132 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 7 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,717 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் விரைந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலி
சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலியானார்.
2. கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
3. விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு
விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்கவும், குறைக்கவும் சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. ஓமனில் புதிதாக 2,015 பேருக்கு கொரோனா; 35 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. கொரோனாவுக்கு பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் புதிதாக 172 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.