உலக செய்திகள்

அமெரிக்காவில் 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Reports that 31.2 crore vaccine doses have been given to public in US

அமெரிக்காவில் 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 31,29,15,170 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 31,18,86,674 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 17,50,53,401 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 14,64,56,124 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 60 நாடுகளுக்கு, 11 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்கா தகவல்
11 கோடி கொரோனா தடுப்பூசிகளை, 60 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் 34.7 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து பென்டகன் பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்; காரணம் என்ன?
சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.
5. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.