உலக செய்திகள்

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷியா + "||" + Russia says it successfully tested hypersonic missile praised by Putin

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷியா

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷியா
ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், சமீபத்திய ஆண்டுகளில் ரஷியா புதியதலைமுறை ஆயுதங்களை அதிக அளவில் மேம்படுத்தி வருகிறது. இந்த எதிர்கால ஆயுதங்களில் ஹைபர்சோனிக் என்று அழைக்கப்படும் ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகள் முக்கிய பங்காற்றும் என்று ரஷியா கூறி வருகிறது.

அந்த வகையில் ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷியா தயார் செய்துள்ளது. 1,000 கி.மீ. வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த ஏவுகணையை ரஷியா  வெற்றிகரமாக சோதித்தது. காலை ரஷிய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை, 350 கி.மீ. வரை சென்று அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி ரஷிய அதிபர் புதின் பிறந்தநாளின் போது சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதும், அப்போது அவர் “சிர்கானின் சோதனை வெற்றி, எங்கள் ராணுவப்படைகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ரஷியா முழுவதிலும் ஒரு பெரிய நிகழ்வு”  என கூறியதும் குறிப்பிடத்தக்கது.