உலக செய்திகள்

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை + "||" + Violence in the struggle against corona restrictions in France

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்தநேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாக சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 போலீஸ் அதிகாரிகளை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதேபோல் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். தடியடியும் நடத்தினர். இதனால் பாரீஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு?
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: டெல்லியில் பள்ளிகள், தியேட்டர்கள் மூட உத்தரவு
மெட்ரோ ரெயில், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தில் வன்முறை
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
4. கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு- கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம், திரையரங்குகளில் 100%இருக்கைகளுக்கு அனுமதி
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5. மும்பையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 47 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு
மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 47 ஆக அதிகரித்துள்ளது.