60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் அரசு முடிவு


60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் அரசு முடிவு
x
தினத்தந்தி 30 July 2021 12:14 PM GMT (Updated: 30 July 2021 12:14 PM GMT)

இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஜெருசலேம்,

உலக அளவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இருப்பினும் வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், 3-வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசியின் 3-வது பூஸ்டர் டோசை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. 

இதை அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் துவக்கி வைக்க உள்ள நிலையில், அதிபர் ஐசக் ஹெர்சோக்கிற்கு முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 57 சதவீதம் பேருக்கு இது வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தீவிர ஊரடங்குகளைத் தவிர்க்கவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

Next Story