உலக செய்திகள்

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Powerful earthquake in Peru

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பெரு மற்றும் தெற்கு ஈகுவடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


நியூயார்க்,

பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

எனினும், சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன என கூறப்படுகிறது.  நிலநடுக்க அதிர்வால் பெரு நாட்டு மக்கள் அச்சத்தில் தெருக்களுக்கு ஓடி வந்துள்ளனர்.  இதன் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதனால் சூப்பர்மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டு
இருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளன.  அந்த பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.  நூற்றாண்டு பழமையான சர்ச் ஒன்றும், 2 வீடுகளும் இடிந்துள்ளன.  பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  3 தீயணைப்பு நிலையங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரு நாட்டு அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ நிலநடுக்க பாதிப்பு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அவற்றை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளார் என்று அந்நாட்டு சிவில் பாதுகாப்பு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
2. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.