உலக செய்திகள்

ரஷியாவில் நடுவானில் ராணுவ விமானத்தில் தீ; தரையில் விழுந்து வெடித்து சிதறியது; 3 பேர் பலி + "||" + Three feared dead as military transport aircraft crashes in Russia

ரஷியாவில் நடுவானில் ராணுவ விமானத்தில் தீ; தரையில் விழுந்து வெடித்து சிதறியது; 3 பேர் பலி

ரஷியாவில் நடுவானில் ராணுவ விமானத்தில் தீ; தரையில் விழுந்து வெடித்து சிதறியது; 3 பேர் பலி
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்த நாட்டு விமான‌ படைக்கு சொந்தமான ‘ஐஎல்-112 வி' ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்தது.தீ பிடித்தபடியே சிறிது தூரத்துக்கு தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள ஒரு வனப்பகுதிக்குள் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் அடுத்த சில நொடிகளில் விமானம் வெடித்து சிதறியது. இதில் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

இதனிடையே விமானம் தீ பிடித்தபடியே வானில் பறந்து, பின்னர் வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பலி: ஒரேநாளில் 1,075 பேராக உயர்வு!
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி
ரஷியாவில் துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
3. கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி
கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
4. போலீஸ் காவலில் விசாரணை கைதி பலி: குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் பிரியங்கா காந்தி
உ.பி.யில் போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.
5. ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை அமெரிக்கா பங்கேற்கவில்லை.