உலக செய்திகள்

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு + "||" + Fire at a chemical factory in Pakistan; 16 people were killed

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  அதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் சிக்கிய 16 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர்.  4 பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை.  இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 18 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரின் ஸ்ரீநகரில் என்கவுண்ட்டர் தொடங்கியது
காஷ்மீரின் ஸ்ரீநகரில் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
2. பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி
தைவான் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் நடத்த சதியா?...
டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்து, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
5. திருமண மண்டபத்தில் தீ விபத்து
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.