உலக செய்திகள்

பாலியல் பலாத்காரத்தை ஆதரித்த டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சிறை + "||" + Yves de M'Bella: Ivory Coast TV host sentenced for promoting rape

பாலியல் பலாத்காரத்தை ஆதரித்த டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சிறை

பாலியல் பலாத்காரத்தை ஆதரித்த டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சிறை
பாலியல் பலாத்காரத்தை ஆதரித்த டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
யாமோசூக்ரோ, 

ஐவரிகோஸ்ட் நாட்டில் டி.வி. நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலமானவர் யெவ்ஸ் டி எம் பெல்லா. இவர் நடத்திய ஒரு டி.வி. நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் நடத்திய டி.வி. நிகழ்ச்சியில் பாலியல் குற்றவாளி ஒருவர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நடித்துக் காட்டினார்.

அதைப்பார்த்து யெவ்ஸ் டி எம் பெல்லா சிரித்து, தமாஷ் செய்தார். அதுமட்டுமின்றி அந்த குற்றவாளி ஒரு பொம்மையை தரையில் போட்டு பாலியல் பலாத்காரம் செய்வது போல நடிக்க இவர் உதவிக்கரமும் நீட்டினார். இதற்கு எதிராக அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

50 ஆயிரம் பேர் யெவ்ஸ் டி எம் பெல்லாவுக்கு எதிராக கையெழுத்து போட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் யெவ்ஸ் டி எம் பெல்லாவுக்கு 12 மாதம் சிறைத்தண்டனை விதித்து அபித்ஜான் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நிகழ்ச்சியில் தோன்றிய கற்பழிப்பு குற்றவாளிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
விருதுநகரில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!
காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
3. 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
4. ஆந்திரா: சிறுமியை மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது...!
ஆந்திராவில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
5. மத்திய அரசின் அனைத்து ஆதரவும் தொழில்துறைக்கு வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
தமிழகம் நீண்ட காலமாக வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.