இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து ‘ஆஸ்இண்டெக்ஸ்’ எனும் கூட்டு ராணுவ பயிற்சி!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Sep 2021 2:25 AM GMT (Updated: 7 Sep 2021 2:25 AM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து ஆஸ்இண்டெக்ஸ் எனும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன.

கன்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவின், ‘ராயல் ஆஸ்திரேலியன்’ கடற்படை, இந்தியாவின் கடற்படையுடன் இணைந்து ஆஸ்இண்டெக்ஸ் (AUSINDEX ) எனும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய கடற்பகுதியில் இந்த வாரம் முழுவதும் நடைபெறுகிறது.

ஆஸ்இண்டெக்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி 2015 முதல் நடந்து வருகிறது. கடந்த 2019-ல் நீர்மூழ்கி கப்பல் முறியடிப்பு பயிற்சியை இந்தியா இந்த ஒத்திகையின்போது பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குவாமில் நடந்த மலபார் 21 பயிற்சியின் நீட்சியாக இந்த பயிற்சி மீண்டும் நடக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆஸ்இண்டெக்ஸ் பயிற்சி ஞாயிறு அன்று தொடங்கி உள்ளதாகவும், வரும் 13-ந்தேதி வரை பயிற்சி நடைபெறும்” என்றும் கூறி உள்ளது.

“நவீன கடற்படை போர் யுத்திகள் ஒத்திகை பார்க்கப்படுகின்றன. இருதரப்பு ராணுவத்தின் கூட்டு மற்றும் இயங்கு திறனை இந்திய பசிபிக் மண்டலத்தில் நிறுவுவதாக இந்த பயிற்சி அமையும். இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் சிறந்த ராணுவ பங்காளிகள். கடற்சார் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவை உறுதிப்படுத்தும் விதமாக ராணுவ பயிற்சியை பகிர்ந்துகொள்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story