உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பணி நீக்கம் + "||" + Taliban sacks Afghan Cricket Board CEO Hamid Shinwari

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பணி நீக்கம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பணி நீக்கம்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஹமித் ஷின்வாரி நீக்கப்பட்டுள்ளார்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்துவோம் என அறிவித்த தலீபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்பட்டு வருகின்றனர். 

புதிதாக அமைக்கப்பட்ட கேபினட்டில் பெண்களுக்கு இடம் அளிக்காத தலீபான்களின் செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. மேலும், பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் தலீபான்கள் தடை விதித்துள்ளனர். அதேபோல், மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலீபான்கள் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை தலீபான்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். ஹமித் ஷின்வாரி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது, அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஹமித் ஷின்வாரிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நசீம் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஷீத் கான் ராஜினாமா, ஆஸ்திரேலியாவுடனான போட்டிகள் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தற்போது புதிய தலைவர் தலீபான்களால் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அமைத்துள்ளனர்.
2. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை: ரஷியா அழைப்பை ஏற்ற இந்தியா
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலீபான்களும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு
ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
4. ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி எனத் தகவல்
மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100- க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
5. ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து கோதுமை அனுப்ப ஐ.நா. கோரிக்கை
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான கோதுமையை இந்தியாவில் இருந்து பெற இந்திய அரசுடன் ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.