காற்று மாசுபாடு தரத்தை புதுப்பித்துள்ளது உலக சுகாதார அமைப்பு


காற்று மாசுபாடு தரத்தை புதுப்பித்துள்ளது  உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2021 8:06 PM GMT (Updated: 24 Sep 2021 8:06 PM GMT)

உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு குறித்த வழிகாட்டுதல்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த புதிய வரம்புகளை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று பரிந்துரைத்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து.
உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு குறித்த வழிகாட்டுதல்களை  15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த புதிய வரம்புகளை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று   பரிந்துரைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பபின் கணக்கின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழு மில்லியன் இறப்புகள் காற்று மாசுபாட்டோடு நேரடியாக தொடர்புடைய  இருக்கலாம் என்றும், காற்று மாசுபாட்டின் விளைவாக 40 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்தியர்கள்   தங்களதுஆயுட்காலத்தில் ஒன்பது வருடம் வரை இழக்க நேரிடும் என்றும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

                      புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் வளிமண்டலத்தில் மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான காற்று மாசுபடுத்திகள் - பிஎம் 2.5, பிஎம் 10, ஓசோன் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகளை உள்ளடக்கியது.காற்று மாசுபாட்டால் ஏற்படும் கணிசமான உயிர் இழப்பை முன்னிலைப்படுத்தி, காற்று மாசுபாடு  தேசிய அளவிலான வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கங்களுக்கு புதிய விதிமுறைகளை அமைத்தன.

காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு காற்றின் தரத்தை மேம்படுத்துவது, காலநிலை மாற்றத்தை போக்கும்  முயற்சிகளை உருவாக்கி  காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
புதியது என்ன?
காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பு, பழைய வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்ததில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற காற்று மாசுபாட்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய தரநிலைகளின்படி,  பி.எம்.2.5 சராசரி ஆண்டு செறிவு ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

 சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்றின் தரநிலை அட்டவணை அறிக்கையின்படி, உலகிலேயே இந்தியா மிகவும் காற்றால் மாசுபட்டுள்ளதாகவும், இந்தோ-கங்கை சமவெளியில் வசிக்கும் 480 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகின் பிற பகுதிகளில் இல்லாத மாசுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறுகிறது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவில் காற்று மாசுபட்டுள்ளது.  டெல்லியில் 3 ல் 1 பள்ளி குழந்தைகள் ஆஸ்துமா, 50% க்கும் அதிகமானவர்களுக்கு ஒவ்வாமை இருப்பதாக ஆய்வு கூறுகிறது. காற்று மாசுபாடு  ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.சுத்தமான காற்று நிதி மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு  சமீபத்தில் தங்கள் அறிக்கையில், காற்று மாசுபாடு காரணமாக இந்திய வணிகங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் 95 பில்லியன் டாலர்  அளவில் செலவாகும். இது ஆண்டுதோறும் சேகரிக்கப்படும் வரியில் தோராயமாக 50 சதவிகிதம் ஆகும்.

        இந்தியாவில் மின்சாதன வாகனங்களின் பயன்பாடு வரும் நாட்களில் அதிகரிக்கும் பட்சத்தில் காற்று மாசுபாட்டின் அளவை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரலாம்.  மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாட்டை அதிகரித்தல், சாலைகளில் குப்பைகள் சேருவதை தடுத்தல்,  ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலமும் காற்றுமாசுபாட்டின் அளவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.


Next Story