ஐ.நா. சபையில் உரை: நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி


ஐ.நா. சபையில் உரை: நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Sep 2021 12:30 AM GMT (Updated: 25 Sep 2021 12:30 AM GMT)

ஐ.நா. சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

வாஷிங்டன்,

குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு உச்சி மாநாடு நிறைவு பெற்றது. 

இதனை தொடர்ந்து நியூயார்க்கில் நாளை நடைபெற உள்ள ஐ.நா. சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, தற்போது நியூயார்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார். அங்கு அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Next Story