உலக செய்திகள்

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 101 பேர் உயிரிழப்பு + "||" + Floods, landslides in Nepal; 101 casualties

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 101 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 101 பேர் உயிரிழப்பு
நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 101 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காத்மண்டு,

நேபாள நாட்டில் இந்த வார தொடக்கத்தில் கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில், அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் பருவமழையை தொடர்ந்து ஏற்பட்டு உள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 101 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, 41 பேரை இன்னும் காணவில்லை.  அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.  வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளன.  49 வீடுகள், 8 கோசாலைகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்து உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 14 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
கடலூரில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
2. திருச்சி மாநகர குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்
திருச்சி மாநகர குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்
3. கண்மாய் நிரம்பி வயல்வெளியில் புகுந்த வெள்ளம்
கண்மாய் நிரம்பி உபரிநீர் அதன் அருகே உள்ள வயல்வெளியில் புகுந்ததால் நெற்பயிர் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
4. ஈரோடு காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்; கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை
ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடிவீடு
அண்மைக் காலமாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.