ஸ்பெயின் நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சுகாதாரத்துறை மந்திரி தகவல்


ஸ்பெயின் நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 6:05 AM GMT (Updated: 25 Nov 2021 6:05 AM GMT)

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி கரோலினா டரியாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத எல்லா வயதினருக்கும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய தினம் அங்கு புதிதாக 6,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது நாடு முழுவதும் 3 ஆயிரம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 546 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்பெயினில் இதுவரை 79 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கரோலினா டரியாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story