மெக்சிகோவில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Dec 2021 7:32 PM GMT (Updated: 3 Dec 2021 7:32 PM GMT)

மெக்சிகோவில் 51 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ,

தற்போது ‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. 

முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மெக்சிகோவில் முதன் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 51 வயது நபர் ஒருவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனை அந்நாட்டின் சுகாதார துணைச் செயலாளர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல் ராமிரெஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story