டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா


டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 21 Jan 2022 10:00 PM GMT (Updated: 2022-01-22T03:30:30+05:30)

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.

டோங்கோ,

பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவு உண்டானது. 

இந்த இயற்கை பேரழிவினால், அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. அங்கு விமான நிலைய ஓடுபாதை சாம்பலால் மூடி இருந்தது. அதை இப்போதுதான் அகற்றி உள்ளனர். இதையடுத்து அந்த நாட்டுக்கு அண்டை நாடுகளான  நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில்,அந்நாட்டுக்கு வழங்குவதற்காக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இருந்து விமானத்தில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


Next Story