உலக செய்திகள்

‘அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு ’ - ஜோ பைடன் எச்சரிக்கை + "||" + Russia likely to invade Ukraine next month Joe Biden warns

‘அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு ’ - ஜோ பைடன் எச்சரிக்கை

‘அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு ’ - ஜோ பைடன் எச்சரிக்கை
பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன்,

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “உக்ரைன் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து தீர்மானமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதை ஜனாதிபதி பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்பு
ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் - நேட்டோ தலைவர்
ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்று நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.
3. ரஷியாவுக்கு உதவ வேண்டாம்: சீனாவுக்கு ஜி 7 நாடுகள் கோரிக்கை
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியா போர் தொடுத்தது.
4. #லைவ் அப்டேட்ஸ்:இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவுடனான போர் முடிந்துவிடும்- உக்ரைன்
போரில் பலியான ரஷிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
5. போரால் உருக்குலைந்த மரியுபோல்... உதவிக்கரம் நீட்டும் ரஷியா!
உக்ரைனின் மரியுபோல் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.