பொலிவியாவில் சுரங்க தொழிலாளர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு


பொலிவியாவில் சுரங்க தொழிலாளர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 11:55 PM GMT (Updated: 30 Jan 2022 11:55 PM GMT)

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிக்கெட்டு ஓடிய பஸ், சாலையோரம் உள்ள 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

சுக்ரே,

தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் கோச்சபாம்பா மாகாணத்தில் உள்ள குயில்லாகொல்லோ நகரில் இருந்து காமி நகருக்கு சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் சுமார் 20 தொழிலாளர்கள் இருந்தனர். 

குயில்லாகொல்லோ-காமி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையோரம் உள்ள 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story