டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு; எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு


டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு; எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 May 2022 10:17 AM GMT (Updated: 13 May 2022 10:17 AM GMT)

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது. தற்போது அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்,  இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

 போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால்  டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து டுவிட்டர் நிறுவன பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது. எலான் மஸ்கின் கருத்து குறித்து டுவிட்டர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.  3.34  லட்சம் கோடிக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story