சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு


சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்  - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு
x

Image Courtesy: AFP

சவுதி பட்டத்து இளவரசரை அமெரிக்க அதிபர் சந்தித்தார்.

ரியாத்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 6-ம் தேதி இஸ்ரேல் வந்தடைந்தார். இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை முடித்து பைடன் நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார்.

சவுதி அரேபியாவின் ஜீடா நகருக்கு பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் முகமது பின் சல்மான் மற்றும் ஜோ பைடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் முகமது பின் சல்மானை ஜோ பைடன் சந்தித்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story