பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோதல் - போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு


பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோதல் - போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு
x

தலைநகர் லிமாவில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

லிமா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரு நாட்டின் அதிபரும், இடது சாரி தலைவருமான பெட்ரோ காஸ்டிலோ, கடந்த ஆண்டு அதிபராக பதவியேற்றதில் இருந்து அவர் மீது 6 கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அதிபர் பெட்ரோ காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இதற்கிடையே பெரு நாட்டில் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிபர் காஸ்டிலோவை பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரு தலைநகர் லிமாவில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதுன், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story