இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
x

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேபோன்று, பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.


Next Story