டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கப்படுகிறதா?- நிறுவனத்தின் செயலால் பயனர்கள் அதிர்ச்சி..!!


டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கப்படுகிறதா?- நிறுவனத்தின் செயலால் பயனர்கள் அதிர்ச்சி..!!
x

பயனர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி தான் 'ஸ்கிரீன்ஷாட் நீக்கம்' குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கலிபோர்னியா,

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் விரைவில் ஸ்கிரீன் ஷாட் வசதி நீக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று தனது பயனர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி தான் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

டுவிட்டரில் இன்று ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்ற சில பயனர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ள "பாப்-அப்" குறுஞ்செய்தியில், இனி ஸ்கிரீன்ஷாட்களுக்கு பதிலாக குறிப்பிட்ட டுவிட்டின் லிங்கை பகிருங்கள் அல்லது அந்த டுவிட்டை ஷேர் செய்யுங்கள் என தெரிவித்துள்ளது.

வரும்காலங்களில் டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதியை நீக்கிய பின் பயனர்கள் இடையூறுகளை சந்திக்காமல் இருக்க அந்நிறுவனம் தற்போதே பயனர்களை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "பாப்-அப்" குறுஞ்செய்தி குறித்த நிறுவனத்தின் வித்தியாசமான நடவடிக்கையால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' ]குறித்து டுவிட்டர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story