13. திருப்பாவை - திருவெம்பாவை


13. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 27 Dec 2016 11:30 PM GMT (Updated: 27 Dec 2016 6:06 PM GMT)

திருப்பாவை புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போ

திருப்பாவை

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதுஅரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பறவை வடிவத்தில் தன்னை கொல்ல வந்த பகாசுரனின் வாயைக் கிழித்து கொன்றவன். பிறர்மனை நாடிய இலங்கை மன்னன் ராவணனின் பத்து தலைகளையும் கிள்ளி எறிந்தவன். இப்படிப்பட்ட ராமன் புகழைப்பாடிய வண்ணம் தோழிகள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். வானில் வியாழ நட்சத்திரம் மறைந்து வெள்ளி தோன்றி விட்டது.

பறவைகள் துயில் நீங்கி எழுந்து கீச்சிட்டு ஆரவாரம் செய்கின்றன. மலரை போன்ற கண்களை உடையவளே, குளிர் நீரில் நீராடி மகிழாது படுத்துக் கிடக்கலாமோ? இந்த நல்ல நாளில் உன் கபட நாடகத்தை கலைத்து விட்டு நீராட வருவாயாக.

திருவெம்பாவை

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்றுஇசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்ப
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.


நீர் நிறைந்த குளிர்ந்த தடாகத்தில் கருங்குவளை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. உமையம்மை குவளை மலர் நிறம் உடையவள். குளத்தில் செந்தா மரை மலர்கள்

மலர்ந்து இருக்கின் றன. நாம் வணங்கும் இறைவன் செந்தா மரை மலர்நிறம் உடையவன். அழகிய நீர்ப்பறவைகள் ஒலி எழுப்புவதாலும் உடல் அழுக்கும், உள்ள அழுக்கும் நீங்க மக்கள் குளிப்பதாலும் இந்நீர் நிலை அம்மை அப்பனாகக் காட்சி தருகிறது. நீர் பொங்கிவரும் இக்குளத்தில் தாவிக் குதித்து வளையல்களும், சிலம்புகளும் ஒலிக்க நெஞ்சம் பூரிக்க நீராடுவோம்.

Next Story