அமர்நீதியாருக்கு அருள்புரிந்த ஈசன்


அமர்நீதியாருக்கு அருள்புரிந்த ஈசன்
x
தினத்தந்தி 7 March 2017 9:45 AM GMT (Updated: 7 March 2017 9:45 AM GMT)

கும்பகோணம் அருகில் உள்ள பழையாறையை சேர்ந்தவர் அமர்நீதியார். இவர் திருநல்லூருக்கு வந்து ஒரு மடம் கட்டி தங்கி இருந்தார்.

கும்பகோணம் அருகில் உள்ள பழையாறையை சேர்ந்தவர் அமர்நீதியார். இவர் திருநல்லூருக்கு வந்து ஒரு மடம் கட்டி தங்கி இருந்தார். அங்கு வரும் சிவனடியார்களுக்கு கோவணம், ஆடை கொடுத்து, அறுசுவை உணவு அளித்து வந்தார். ஒரு நாள் நல்லூர் கல்யாண சுந்தரப்பெருமான்  பிரம்மசாரியின் வேடத்தில் கையில் தண்டு தாங்கி, கோவணம் அணிந்து இவரது மடத்துக்கு வந்தார். அவரை அமர்நீதியார் வரவேற்று விருந்துண்ண அழைத்தார். அதற்கு பெருமான் தாம் நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறி தம்மிடம் உள்ள கோவணத்தை அவரிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும் படி கூறிவிட்டு சென்றார். பின்னர் சிவபெருமான் அந்த கோவணத்தை மறையும்படி செய்தார். இதையடுத்து மடத்துக்கு திரும்பிய பெருமான் அமர்நீதியாரிடம் கோவணத்தை கேட்க அதை வைத்த இடத்தில் காணாது அமர்நீதியார் திகைத்தார். வேறு கோவணம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். ஆனால் பிரம்மசாரி வடிவில் இருந்த சிவபெருமான் அதனை மறுத்து தன் கோவண எடைக்குக் கோவணம் அளிக்குமாறு சொன்னார். அமர்நீதியார் மடத்தில் உள்ள கோவணங்களை மட்டும் இல்லாமல் தம் ஆடை, அணிகலன்கள் அனைத்தையும் வைத்தும் தராசுத்தட்டு நேராக நிற்கவில்லை. பின்னர் தானும் ஏற தராசு சரியாக நின்றது. பிரம்ம சாரியும் உமாபதியாக காட்சி அளித்து அமர்நீதியாரை அவர் மனைவி, மக்களோடு திருக்கயிலைக்கு அழைத்துக்கொண்டார்.

Next Story