ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + The week is a miracle

வாரம் ஒரு அதிசயம்

வாரம் ஒரு அதிசயம்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் சுகந்தவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் சுகந்தவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இரட்டை முக பைரவர், மேற்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்பாலித்து வரு  கிறார். போகர் என்ற சித்தர், நவபாஷாணத்தில் உள்ள வி‌ஷத்தன்மையை நீக்கி பழனி முருகன் சிலையை உருவாக்கினார். அதே போகர் தான், இந்த இரட்டை முக பைரவரையும், வி‌ஷத்தன்மையை நீக்காமல் நவபாஷாணத்தால் வடித்துள்ளார். பழனி முருகனின் சிலையை வடிப்பதற்கு முன்பே உருவாக்கப்பட்டது இந்த பைரவர் சிலை என்று தல வரலாறு கூறுகிறது. காசி கால பைரவருக்கு நிகரான இந்த பைரவரின் முன்புறம் தீபாராதனை காட்டும்போது பைரவர் போலவும், பின்புறம் தீபாராதனை காட்டும்போது பழனி முருகன் போலவும் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்

1. சுதக்‌ஷனை - புதிய தொடர்
ராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.
2. நவராத்திரியும்..நைவேத்தியமும்..
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.
3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.
4. முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.
5. குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.