ஆன்மிகம்

சூரியனார் கோவில் + "||" + Sun Temple

சூரியனார் கோவில்

சூரியனார் கோவில்
பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் சூரியனார் கோவிலுக்கு உண்டு.
ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில், ஆடுதுறையில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் புகழ் வாய்ந்த தலம். பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் சூரியனார் கோவிலுக்கு உண்டு.

தென்னாட்டில் சூரியனுக்கு என்று தனிக்கோவில் அமைந்துள்ள தலம்.

ஒரு கோவிலுக்குள் நவக்கிரகங் களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம்.

சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.

வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவளும் இன்முகங்களுடன், நவக்கிரகங்கள் அருள் வழங்கும் தலம்.

நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.

ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யும் படி அமைந்துள்ள தலம்.

இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.

நவக்கிரகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.