இந்த வார விசேஷங்கள் : 25-9-2018 முதல் 1-10-2018 வரை


இந்த வார விசேஷங்கள் : 25-9-2018 முதல் 1-10-2018 வரை
x
தினத்தந்தி 25 Sep 2018 10:30 AM GMT (Updated: 25 Sep 2018 10:30 AM GMT)

25-ந் தேதி (செவ்வாய்) * மகாளய ஆரம்பம். * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவன காட்சி.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (புதன்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

27-ந் தேதி (வியாழன்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (வெள்ளி)

* பரணி மகாளயம்.

* சங்கடஹர சதுர்த்தி.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* திருப்ேபாரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு.

* கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (சனி)


* கார்த்திகை விரதம்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (ஞாயிறு)

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

* இன்று முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.

* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (திங்கள்)

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள். 

Next Story