ஆன்மிகம்

கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + "||" + Govinda slogan Panguni Therottam in Srirangam

கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.


8-ம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

பின்னர் காலை 8.40 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண்டாள் யானையும், 2 வெள்ளைக்குதிரைகள் முன்னே செல்ல ‘கோவிந்தா’ கோஷம் முழங்க நான்கு சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது.

பின்னர் தேரின் முன் பக்தர்கள் சூடம் மற்றும் நெய் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். மேலும் தேரோட்டத்தை காண வெளிநாட்டு பக்தர்களும் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.