மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாருதி வழிபாடு


மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாருதி வழிபாடு
x
தினத்தந்தி 15 Dec 2020 10:30 PM GMT (Updated: 2020-12-14T23:33:15+05:30)

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கிறது.

அவர்களை நாம் வழிபடுகின்ற பொழுது அந்த வலிமை நமக்குக் கிடைக்கின்றது. அந்த அடிப்படையில் உடல் வலிமை இல்லாமல் இருப்பவர்கள், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எண்ணற்ற தடைகளைச் சந்திப்பவர்கள், இனிய இல்லறம் அமைய வேண்டுமென்று நினைப்பவர்கள் கொண்டாட வேண்டிய தெய்வம் அனுமன்.

அனுமனுக்கு கொண்டாடப்படும் திருநாள் அனுமன் ஜெயந்தி. அந்த திருநாள் இந்த வருடம் மார்கழி மாதம் 28-ந் தேதி (12.1.2021) செவ்வாய் அன்று வருகின்றது. அன் றைய தினம் அவருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். வண்ணமாலை சூட்டி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும். அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும். வாழைப்பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நம்பிக்கை.

Next Story