திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா


திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 10 March 2021 5:36 AM GMT (Updated: 2021-03-10T11:06:02+05:30)

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்மவாகனம், பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 11-ந்தேதி சிவராத்திரி விழாவும், 15-ந்தேதி தேர்த்திருவிழாவும், 16-ந்தேதி திருக்கல்யாண திருவிழாவும், 17-ந்தேதியன்று புஷ்ப பல்லக்கு, 18-ந்தேதியன்று தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

Next Story