ஆன்மிகம்

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் + "||" + With care Time to act

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
இந்த புதிய ஆண்டில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் வருமாறு.
செவ்வாய்-சனி பார்வை காலம்

பிலவ வருடத்தின் தொடக்கத்தில் 14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியை எட்டாம் பார்வையாகப் பார்க்கின்றார். அதே நேரத்தில் கும்பத்தில் உள்ள குரு, மிதுனச் செவ்வாயை பஞ்சம பார்வையாகப் பார்த்து கடுமையைக் குறைப்பதோடு ‘குரு மங்கள யோக’த் தையும் உருவாக்குகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். 24.10.2021 முதல் 7.12.2021 வரை துலாத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் உள்ள சனியை 4-ம் பார்வையாக பார்க்கின்றார்.

கன்னி - செவ்வாய்

8.9.2021 முதல் 23.10.2021 வரை கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். ‘கன்னி செவ்வாய் கடலும் வற்றும்’ என்பது பழமொழி. இருப்பினும் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ அடைந்த குருபகவான், மகர ராசியில் இருந்தபடி கன்னி ராசியில் உள்ள செவ்வாயைப் பார்ப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.