ஆன்மிகம்

வித்தியாசமான அக்னி பகவான் + "||" + Strange Agni Bhagavan

வித்தியாசமான அக்னி பகவான்

வித்தியாசமான அக்னி பகவான்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது, பாதேஷ் என்ற ஊர். இங்கு பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது, பாதேஷ் என்ற ஊர். இங்கு பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவில் எட்டு பெரிய குகைகளையும், பல சிறிய குகைகளையும் உள்ளடக்கிய பெரிய வளாகம் போல் காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.


இந்த ஆலய வளாகத்தில் ஒரு வித்தியாசமான சிலையையும் நாம் காண முடியும். நந்தியின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான சிலையை, அக்னி பகவானின் உருவம் என்கிறார்கள். வேதத்தில் அக்னி பகவானுக்கு இரண்டு தலைகளும், மூன்று கால்களும், ஏழு கைகளும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த சிலை இருப்பதால், இதனை அக்னி பகவான் என்றே வழிபட்டு வருகின்றனர்.

நேராக நின்று பார்க்கும் போது, மனித முகம், சற்று சாய்வாக பார்க்கும்போது நந்தியின் முகம் என இரண்டு முகங்கள் தெரியும். நேராக நின்று பார்க்கும்போது மனித கால்கள் இரண்டு, நந்தியின் கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும், இடது பக்கமாக நின்று பார்க்கும்போது நந்தியின் கால்கள் இரண்டு, மனித கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும் தென்படும். (இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்). அதே போல் கரங்களும் 7 இருப்பதை பார்க்கலாம். நேராக நின்று பார்க்கும்போது இந்த 7 கரங்களும் தெளிவாகத் தெரியும்.

இது ஒரு சிவாலயம் என்பதால், நந்தியின் வடிவத்தில் அக்னி பகவானின் சிலையை வடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ. தகவல்
ஒடிசா கடற்கரையில் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

அதிகம் வாசிக்கப்பட்டவை