பவானிசங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


பவானிசங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஈரோடு

பவானி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்கமேஸ்வரர் கோவில்

பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா சங்கமேஸ்வரர் சன்னதியில் இன்று (புதன்கிழமை) 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நாளை ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் ஆதிகேசவ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பின்னர் அன்று இரவு சேஷ வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 28-ந் தேதி, 29-ந் தேதிகளில் சாமிக்கு அபிஷேக ஆராதனையும், இரவில் திருவீதி உலாவும் நடக்கிறது.

தேரோட்டம்

வருகிற 30-ந் தேதி காலை ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறுகிறது. இதில் 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருமுறை ஆசிரியர்கள், சந்தான குறவர்கள், சேக்கிழார் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு சாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

3-ந் தேதி காலை ஆதிகேசவ பெருமாள் மற்றும் சீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவமும், இதைத்தொடர்ந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளி தேேராட்டமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி காலை வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வருக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து தேரோட்டமும், மாலையில் மகா அபிஷேகமும் நடக்கிறது. 5-ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் மற்றும் தீர்த்த வாரியும், 7-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story