கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் திருவிழா


கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
x

கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு

கடத்தூர்

கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தான்தோன்றி அம்மன் கோவில்

கோபி அருகே கெட்டிச்செவியூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 6-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 8-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

குண்டம் விழா

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணி அளவில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 8 மணி அளவில் கோவிலின் தலைமை பூசாரி செந்தில்குமார், குண்டம் இறங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பக்தர்கள் பலர் தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடன், குண்டம் இறங்கியது. அங்கிருந்த மற்ற பக்தர்களை பக்தி பரவசம் அடைய செய்தது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் தான்தோன்றி அம்மன் அருள்பாலித்தார்.

தேரோட்டம்

விழாவில் கெட்டிசெவியூர் குன்னத்தூர், திருமநாதம்பாளையம், மாமரத்தப்பாளையம், தோரணவாவி, கொளப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) ேதரில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், நாளை தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும், அன்று இரவு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


Related Tags :
Next Story