கோவிலை மூடிய மரம்


கோவிலை மூடிய மரம்
x

விஷ்ணு சன்னிதி 400 ஆண்டுகால பராமரிப்பு இல்லாத காரணத்தால், மரங்களால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

கம்போடியாவில் சுமார், 162 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது, அங்கோர்வாட் கோவில். இந்தக் கோவில் இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சில மன்னர்களின் ஆட்சி மாற்றத்தால், 16-ம் நூற்றாண்டில் முழுமையாக கைவிடப்பட்டு, மீண்டும் 20-ம் நுற்றாண்டில்தான் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் நான்கு நூற்றாண்டுகளாக கைவிடப்பட்டிருந்த ஒரு ஆலயத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை, இப்போதும் அங்கு நாம் கண்கூடாக பார்ப்பதற்கு சில எச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்ப்பது. இது விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இடையில் 400 ஆண்டுகால பராமரிப்பு இல்லாத காரணத்தால், மரங்களால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. அதுவே தற்போது ஒரு அழகிய தோற்றத்தையும் அதற்குக் கொடுத்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பில் பல கட்டிடங்களை, அங்கோர்வாட் கோவிலுக்குள் நாம் காண முடியும்.


Next Story