புஞ்சைபுளியம்பட்டி அருகே புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


புஞ்சைபுளியம்பட்டி அருகே  புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி காலை 7 மணி அளவில் பவானி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8-ந் தேதி விநாயகர் வழிபாடு, கோபூஜையும், 9-ந் தேதி முளை பாலிகை ஊர்வலமும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும், இதைத்தொடர்ந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து ஊர்வலமும் நடந்தது. பின்னர் காைல 5.30 மணிக்கு விநாயகர், செல்லாண்டியம்மன் உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 8.30 மணி அளவில் யாக சாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புற்று மாரியம்மன் கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.


Next Story