ஆடி அமாவாசையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி அமாவாசையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஈரோடு

ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பண்ணாரி அம்மன்

ஆடி அமாவாசை அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதன்படி பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினார்கள். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக குண்டம் அமைக்கப்படும் இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு தூவி வணங்கினார்கள். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பத்ரகாளியம்மன்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அந்தியூர் சிங்காரி வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு ராகி கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது

தான்தோன்றி அம்மன்

மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், காசிபாளையம் அம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், கோபி இருக்கன் குடி மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் ஊஞ்சலூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், கொடுமுடி புது மாரியம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Related Tags :
Next Story