பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்


பண்ணாரி அம்மன் கோவிலில்  எடப்பாடி பழனிசாமி  குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி தரிசனம்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது மனைவி, மகனுடன் காரில் வந்தார்.

அப்போது அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோவிலில் நடந்த அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பண்ணாரி அம்மன் படம்

மேலும் இதுபற்றி அறிந்ததும் பண்ணாரி அருகே உள்ள ராஜன் நகர் அ.தி.மு.க. பிரமுகர் ரவி கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரிடம் அம்மன் படம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி கோவிலுக்கு வந்திருப்பதை தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அவரை பார்க்க அங்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமி தரிசனத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Related Tags :
Next Story