திருமலையில் பக்தர்களுக்கு மொட்டைபோட சிறப்பு ஏற்பாடு


திருமலையில் பக்தர்களுக்கு மொட்டைபோட சிறப்பு ஏற்பாடு
x

திருப்பதியில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மொட்டைபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

திருமலை:

திருப்பதியில் பக்தர்களுக்கு மொட்டை போடுவதற்கு 1,189 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 214 பேர் பெண் தொழிலாளர்கள். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இவர்கள் மூன்று ஷிப்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கோவில் மாட வீதிகளில் வாகன சேவைகள் இருப்பதால், பக்தர்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருமலையில் உள்ள பிரதான கல்யாணகட்டாவுடன் 10 மினி கல்யாணகட்டாக்கள் உள்ளன. பிரதான கல்யாண கட்டாவைத் தவிர, பி.ஏ.சி.1, பி.ஏ.சி.2, பி.ஏ.சி.3 போன்ற மினி கல்யாணகட்டாக்கள் 247 செயல்படுகின்றன. இவை அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இவற்றில் சோலார் வாட்டர் ஹீட்டர் உடன் சுடு நீர் வசதி உள்ளது. பக்தர்கள் குளிப்பதற்கு குளியலறைகள் உள்ளன.

அனைத்து கல்யாண்கட்டாக்களிலும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்யாணகட்டாவில் உள்ள அனைத்து ஹால்களிலும் போதுமான எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களால் தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story