ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலுக்குபக்தர்கள் 1,008 பால் குட ஊர்வலம்


ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலுக்குபக்தர்கள் 1,008 பால் குட ஊர்வலம்
x

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 1,008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனா்.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கிராம மக்கள் சார்பில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெறும். அதன்படி 18-வது ஆண்டு 1,008 பால் குட அபிஷேகம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி அளவில் நாகேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றங்கரையில் அனைத்து பால்குடங்களுக்கும் சிறப்பு பூஜை நடைெபற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் உற்சவ சிலை பல்லக்கில் வைத்து இழுத்து செல்லப்பட்டது. அம்மன் சப்பரம் முன்செல்ல ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பால்குடங்களை சுமந்து சென்றனர். அக்ரஹாரம், தெற்கு வீதி, ஈரோடு-கரூர் மெயின்ரோடு வழியாக சென்று முதலில் செல்லாண்டி அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பின்னர், ஊர்வலம் மாரியம்மன் கோவிலை நோக்கி புறப்பட்டது. அங்கு சென்றதும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம் செய்தனர். பகல் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story